தமிழ்நாடு அணிகள் 5வது தேசிய பாரா கோல்பால் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக பங்கேற்றன:-

பீகார் மாநிலம் பாட்னாவில் சமீபத்தில் நிறைவடைந்த 5வது தேசிய பாரா கோல்பால் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டு அணிகள் அசத்தல் சாதனை படைத்துள்ளன. தமிழ்நாட்டு அணிகளின் பங்கு:- இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் அணிகள் கலந்து கொண்டனர். இந்திய பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், கோல்பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா உடன் இணைந்து பீகார் பாரா விளையாட்டு சங்கம் ஜனவரி 10 முதல் 13, 2026 வரை நடத்திய இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து …

பீகார் மாநிலம் பாட்னாவில் சமீபத்தில் நிறைவடைந்த 5வது தேசிய பாரா கோல்பால் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டு அணிகள் அசத்தல் சாதனை படைத்துள்ளன.

தமிழ்நாட்டு அணிகளின் பங்கு:-
இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் அணிகள் கலந்து கொண்டனர்.
இந்திய பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், கோல்பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா உடன் இணைந்து பீகார் பாரா விளையாட்டு சங்கம் ஜனவரி 10 முதல் 13, 2026 வரை நடத்திய இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 16 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் அணி அதிகபட்சமாக 5 ஆம் இடத்தைப் பிடித்தது, அதேசமயம் பெண்கள் அணி அரை இறுதி வரை முன்னேறி குஜராத் அணியிடம் 8-9 என்ற நெருக்கடியான கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 4 ஆம் இடத்தைப் பெற்றது.
இந்த சாதனைகள் நமது மாநிலத்தின் விளையாட்டு துறையில் மற்றொரு பெருமையான நிகழ்வாக அமைந்தது. குறிப்பாக பாரா விளையாட்டு போட்டியில் நம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விடா முயற்சியையும் மண வலிமையையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

வீரர்கள் மற்றும் அதிகாரிகள்:-
ஆண்கள் அணியில்
டி.அகிலேந்திரன்,
பி.பிரவீண்குமார்,
கே. மதன்ராஜ்,
ஆர். சஞ்சய் குமார்,
ஏ. வேலுமணி,
டி. சத்திரபதி ஆகியோர் விளையாடினர்,

உடன் பயிற்சியாளர் வி. மகேஸ்வரன் மற்றும் மேலாளர் நெல்சன் ஆகியோர் பயணித்தனர்.

பெண்கள் அணியில்
ஆர்.  விஜயலட்சுமி,
எம்.  முகேஸ்வரி,
எம்.  ரம்யா,
ப.  சுபாஷினி,
ஆர். சி. விஜயலட்சுமி,
எம். திவ்யதர்சினி ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
பயிற்சியாளர் பாரதி ராஜா ஜி. ஆர்., மேலாளர் பிரைசி. எஸ், ஆகியோர் உடன் பயணித்தனர்.
இவர்களின் உழைப்பு மற்றும் உறுதி ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் – கண் பார்வையின்மை என்ற தடையை மீறி இத்தகைய உயர்வு என்பது உண்மையான வெற்றி! அடுத்தடுத்த போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று இன்னும் பெரியதாய் பிரகாசிக்குமாறு  ஐ1 ஸ்போர்ட்ஸ் சார்பாக இதயபூர்வமாக வாழ்த்துகிறோம்.

PrevPrevious Post Quick breakfast ideas
Next Post ISL 2025–26 ஒளிபரப்பு உரிமைகள் FanCode-க்கு வழங்கல். Next
What to read next...